ஞாயிறு, 25 டிசம்பர், 2011

.


ஹஜ் சர்வீஸ் நிருவணங்களும்,  அதன் வழிகாட்டிகளும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



இஸ்லாமிய செல்வந்தர்கள் மீது மட்டும் கடமையாக்கிய ஹஜ் எனும் வணக்கத்தின் பெயரில் ஹஜ் சர்வீஸ் நிருவணங்கள் அவர்களிடம் பணம் பன்னுவதிலேயே குறிக்கோளாக இருப்பார்களேத் தவிற அழைத்துச் செல்பவர்களுக்கு முறையான மார்க்க வழிகாட்டிகளை நியமிப்பதில்லை, மக்காவில் இறக்கி விட்டதும் ஹாஜிகளுக்கு தங்களது நாட்டு விசேஷ உணவுகளை சமைத்து வழங்குவதிலும், நிம்மதியாக உறங்க வைப்பதிலும் அலாதி கவனம் செலுத்துவார்கள், அவ்வாறு நடந்து கொண்டால் நல்ல ஹஜ் சர்வீஸ் நிருவனம் எனும் புகழாரம் தங்களுடைய நிருவனத்திற்கு கிடைத்துவிடும் அதன் மூலம் வருடந்தோறும் பணம் பண்ணலாம்.

முறையான மஹரத்துடன் பெண்களை அழைத்துச் செல்வதில்லைமஹரமில்லாமல் ஒரு பெண் தொலைதூரம் பயணிக்கக்கூடாது என்று மார்க்கம் கட்டளையிட்டுள்ளது, ஆனால் இவர்கள் ( டூப்ளிகேட் ) மஹரத்துடன் அழைத்து வருவார்கள் அதை மார்க்கம் அனுமதிக்கிறதா ? மஹரம் என்று அழைத்து வருபவர்கள் இஸ்லாம் யாருடன் மறைந்திருக்க வேண்டும் என்று கூறுகிறதோ அது மாதிரியான அண்ணிய ஆண்களுடைய பெயரில் மஹரமாக்கி அழைத்து வருவார்கள், இவ்வாறு பெண்களை ஹஜ் செய்யச்சொல்லி மார்க்கம் கட்டளையிட்டுள்ளதா ? என்று ஹஜ் நிருவணங்கள்  கவனிக்க வேண்டும். தங்களது புக்கிங் செய்யப்பட்ட வாகனம் ஃபுல் ஆகிறதா ? என்ற ஒரே கவணத்தில் இருப்பவர்கள் ஹஜ்ஜின் அடிப்படை அமலைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். மக்காவில் சமைத்துக் கொடுப்பதற்கு பேர் பெற்ற பண்டாரியை தேடி அலைபவர்கள் ஹஜ்ஜின் அமல்களை நபிவழியின் அடிப்படையில் சொல்லிக் கொடுப்பதற்கு நல்ல ( தவ்ஹீத் ) மார்க்க அறிஞரை தேடி அலைய மாட்டார்கள். இதனால் வருடந்தோறும் புனித ஆலயத்தில் நிகழும் விபத்துகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர். அல்குர்ஆன்  2:16

கல் எறியும் சட்டம்
ஒன்றிரண்டு முறை மினாவில் யதார்த்தமாக ஏற்பட்ட தீவிபத்தைத் தவிற ஒவ்வொரு வருடமும் தவறாமல் நிகழும், மற்ற விபத்துகள் அனைத்தும் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிடும் இடமும், ஷைத்தானுக்கு கல் எறியும் இடமும், ஜம் ஜம் கிணற்றருகேயுமாகும் ( இப்பொழுது கிணறு இருக்கும் இடத்தில் தடுப்பு ஏற்படுத்தப் பட்டு விட்டது )  என்பது குறிப்பிடத் தக்கதாகும்.


ஹஜ்ருல் அஸ்வத் எனும் கல்லை முத்தமிடும் அமல் ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களது திருக்கரங்களால் அதைத் தொட்டார்கள் என்றும், அதை முத்தமிட்டார்கள் என்றும் அறிவிப்புகள் உள்ளன என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை, அன்று கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அங்கு திரண்டிருக்க வில்லை, இன்றைய நிலை அவ்வாறில்லை அங்குக் குழுமுகிற பல லட்சக் கணக்கான மக்களும் அக்கல்லைத் தொட்டாக வேண்டுமெனில் அது சாத்தியமாகுமா ? என்று சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரும் அதை தனக்கு சாத்தியமாக்கிக் கொள்வதால் மூச்சு விடக்கூட முடியாத மக்கள் நெரிசலில் ஒருவரோடு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு நெருக்குவதில் அங்கு விபத்து ஏற்படுகிறது நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; . . . அல்குர்ஆன் 23:62

அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம் என்று அல்லாஹ் திருமறையில் கூறுவதால் அதன் கூற்றை இதுபோன்ற அமல்களுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். லட்சோப லட்ச மக்களும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அக்கல்லை முத்தமிடுவது என்பது சக்திக்கு மீறிய செயலா ? இல்லையா ? என்பதை சிந்திக்க வேண்டும் .( முத்தமிட்டுத் தான் ஆக வேண்டும் என்பது அவசியமில்லை அதை முத்தமிடாமல் திரும்பினால் ஹஜ் நிறைவேறாது என்று எங்கும் கூறப்படவில்லை ) நீங்கள் அறுத்துப் பலியிடுகின்ற பிராணியின் மாமிசமோ அதன் இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைய மாட்டாது. மாறாக, உங்களிடமுள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்.(ஹஜ்: 37)

மேற்கானும் திருமறை வசனப்படி ஹஜ்ருல் அஸ்வத் கல்லுக்கு கீழ்கானும் அடையாளமிடப்பட்ட கோட்டிற்கு கீழ் நின்று கைகளை உயர்த்தி தக்பீர் சொல்லி விட்டு தவாபை தொடர்ந்தால் தவாபுக்கான கூலி கிடைத்து விடும், மாறாக வயதானவர்களையும், இளம்பெண்களையும், சிறார்களையும் முட்டி மோதி தள்ளி விட்டு அக்கல்லை முத்தமிட்டால் அமலுக்கான கூலி கிடைத்து விடுமா ? அந்த அமலுக்கான கூலி கிடைக்குமா ? அல்லது கிடைக்காதா ? என்பது அடுத்த கட்டம் உங்களால் மோதி தள்ளி கீழே விழுந்து காலை கையை உடைத்துக் கொண்டவர் அல்லது உங்களால் மோதி தள்ளப்பட்டு கீழே வீழ்ந்தவர் நெரிசலில் மீண்டும் எழமுடியாமல் மிதிப்பட்டு மரணமடைந்து விட்டால் இதற்கென்ன தண்டனை என்பதையும் புரிந்து வைத்துக் கொண்டப்பின் முட்டி மோதிச் சென்று அக்கல்லை முத்தமிட முயற்சி செய்துகொள்ளுங்கள். அமைதிதவழும் மார்க்கத்தில் பிறந்தவர்கள் அமைதியாக வணக்கவழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

நிச்சயமாக நீ ஒரு கல் தான். நன்மை செய்யவோ அல்லது தீமை பயக்கவோ உன்னால் இயலாது என்பதை நான் அறிவேன். மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் ஒருவேளை பார்த்திரா விட்டால் உன்னை நான் ஒரு போதும் முத்தமிடப் போவதில்லை என்று உமர் (ரலி) அவர்கள் கூறிக்கொண்டு ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டார்கள். அறிவிப்பவர்: ஹாபீஸ் இப்னு ரபீஆ(ரலி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம் அக்கல்லுக்கு அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களாhல் வழங்கப்பட்ட மதிப்பு அவ்வளவு தான் ஆனால் முண்டியடித்துக் கொண்டு செல்பவர்களுடைய நோக்கம் அதுவல்ல அதை முத்தமிடாவிடில் ஹஜ் நிறைவேறாது என்பதாகும்.

கல்லெறியும் அமல்  : சுண்டு விரலால் வீசக்கூடிய கற்களைப் போன்று ஏழு கற்களை நபி (ஸல்) அவர்கள் வீசினார்கள். ஒவ்வொரு கற்களையும் வீசும் போது தக்பீர் கூறினார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதார நூல் : அபூதாவூத் , பைஹகி

சுண்டு விரலால் வீசக்கூடிய கற்கள் எவ்வாறு இருக்கும் ? என்பதை புரிந்து கொண்டு அவ்வாறான கற்களைக் கொண்டு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வீசலாம், அவ்வாறான கற்களைக் கொண்டு வீசினால் பிறர் மீது பட்டு விட்டாலும் கூட பாதிப்பை உண்டு பண்ணாது, மேலும் அடுத்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக. வீசியவர்கள் அங்கிருந்து தாமதமின்றி இடம் பெயர்ந்து விடவேண்டும். கூட்ட நெரிசல் கருதி தாமதித்தும் வீசலாம் அவ்வாறு வீசினால் விபத்துக்கள் குறையும். பத்தாம் நாள் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மாலையான பின்புதான் நான் கல் எறிந்தேன் என்றார், பரவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)நூல் : புகாரி

கூட்டம் அதிகரிக்கிறது மேலும் நெருங்கினால் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது, அதன் மூலம் பல உயிர்கள் பலியாவதற்கு வாய்ப்பிருக்கிறதென்று தனது சிற்றறிவில் எட்டினால் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டு சற்று நேரம் தாமதித்து கல் எறியலாம் என்பதை ஜாபிர் (ரலி) அறிவிக்கும் நபிமொழி பறைசாட்டுகிறது. மேலும் பெரும் பெரும் கற்களைக் கொண்டு வீசுவதால் பலரது மண்டையை அது பதம் பார்த்து விடுகிறது, சிலர் இன்னும் அத்து மீறி செருப்புகளை விட்டு அக்கல் தூனில் வீசுவார்கள் இதுபோன்ற செயல்பாடுகளெல்லாம் அக்கல் தூனில் ஷைத்தனைப் பிடித்து கட்டப்பட்டுள்ளதாக தவறான சிந்தனையில் நடந்து கொள்வதாகும்.

அமைதியாக அமல் செய்து அதன் மூலம் தானும் படிப்பினை பெற்றுப் பிறருக்கும் படிப்பினையை ஏற்படுத்த வேண்டிய ஒரு அமலை கேலிக்குரியதாக்கி தங்களை அறியாமையின் விளிம்பிற்கு இட்டுச்சென்று விடுவதுடன் பிறரது விமர்சனத்திற்கு இஸ்லாத்தை உட்படுத்தி விடுகின்றனர்.

இவ்வாறு செய்யும் பொழுது ஏற்படுகிற விபரீதத்தால் இஸ்லாத்தைப் பற்றின அறிவில்லாத மக்கள் இஸ்லாத்தை விமர்சிக்கத் தொடங்குகிறார்கள், இஸ்லாத்திற்கு வருகை தர நினைக்கின்ற மக்கள் விலகுகிறார்கள், அங்கு ஏற்படுகின்ற விபத்தை அல்லாஹ் ஏன் தடுத்து நிருத்த வில்லை ? ஏன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்றெல்லாம் அல்லாஹ்வுடைய ஆற்றலை அறியாத மக்கள் கேள்வி கேட்கும் நிலை ஏற்படுகிறது.

இது தான் தெளிவான பாதை என்று தெரிந்து கொண்டப் பின் தங்களுடய உலகாதாயத்திற்காக வேறொருப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ் உதவுவதில்லை என்பதற்கு இஸ்லாமிய ஆரம்ப வளர்ச்சி கால கட்டத்தில் நடந்த உஹது யுத்தத்தில் சில உயிர் சேதத்தின் மூலம் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்து கொண்ட மக்களுக்கு படிப்பினையை வழங்கினான். நபிகளார் இட்ட வளையத்தை உடைத்துக் கொண்டு பொருளின் மீது ஆசை கொண்டு ஓடிய ( அதுவும் இஸ்லாமிய வளர்ச்சிக்கென தங்களை முழுவதும் அர்ப்பனித்த ) மக்களை எதிரிகளிடம் தோல்வியுறச் செய்து கடுமையான உயிர் சேதத்தை ஏற்படுத்திக் கொடுத்து அவற்றை அன்றைய மக்களுக்கும் பின் வரும் இஸ்லாமிய வழித் தோன்றல்களுக்கும் மாபெரும்  படிப்பினையாக்கினான். எந்த ஒரு விஷயத்திலும் பேராவல் கொள்வதையும் அமீருடைய கட்டளையை மீறுவதையும் அதிலிருந்து அல்லாஹ் தடை செய்தான்.

அல்லாஹ் கூறுகிறான் : மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப் படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; . அல்குர்ஆன் :  22:30.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக